» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் பதக்கம்: வீராங்கனைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு
வெள்ளி 7, மார்ச் 2025 4:32:00 PM (IST)

தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீராங்கனைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு தெரிவித்தார்.
தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 23 வது தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துமீனா என்ற வீராங்கனை, குண்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். இதனையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க செயலாளர் ஸ்டீபன் மற்றும் துணைத் தலைவர் கிறிஸ்டோபர் விஜயராஜ் உடன் இருந்தனர். மேலும் மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் முகமது நசீர், துணைத் தலைவர் கான்ஸ்டன்ட், துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் நீலராஜன், ஈசி மெம்பர் ரிஹானா பர்வீன், மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆண்டனி அதிர்ஷ்டராஜ் ஆகியோர் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










