» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக அரசு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம்: பதிவு செய்ய அழைப்பு!

வெள்ளி 7, மார்ச் 2025 4:23:38 PM (IST)

தமிழ்நாடு அரசு சார்பில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் வேலைநாடுநர்கள் பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழக அரசு வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில், இதுவரை மாநில அளவில் 725 தனியார்துறை நிறுவனங்கள் 43 துறைகளில், 31553 பணிக்காலியிடங்களை இதுவரையில் உள்ளீடு செய்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தமட்டில் 214 தனியார்துறை நிறுவனங்கள், 25 துறைகளில், 1786 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in இந்த இணையதள முகவரியில் பதிவு செய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற இயலும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 9677734590 எண்ணினை தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

sivaMar 7, 2025 - 05:35:04 PM | Posted IP 172.7*****

No

K.sivagopinathanMar 7, 2025 - 05:19:01 PM | Posted IP 162.1*****

Job vacancy in tuticorin Salary 30,000/- per month Contact cell no 7708451886 Address 31/1 varatharajapuram street Tuticorin 628002 Any contact me.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory