» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மானிய சிலிண்டர் பெற பயனாளி விபரங்களை புதுப்பிக்க வேண்டும் : ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 7, மார்ச் 2025 4:10:18 PM (IST)
பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது பயனாளி விபரங்களை (e-KYC) உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் பலர், தங்களது முதல் எரிவாயு உருளைக்கு பிறகு நீண்ட காலமாக மாற்று எரிவாயு உருளை பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடமிருந்து தனித்தனியாக நினைவூட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது.எனவே இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் பயனாளிகள் சம்பந்தப்பட்ட எரிவாயு முகவரிடம் தங்களது ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது பயனாளி விபரங்களை (e-KYC) உடனடியாக புதுப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது, தவறும் பட்சத்தில் உஜ்வலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்ற பயனாளிகளின் எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










