» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் சர்வதேச மகளிர் தின விழா
வெள்ளி 7, மார்ச் 2025 3:01:07 PM (IST)

கோவில்பட்டியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் 57 விவசாய பெண்மணிகளுக்கு கிரீடம் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஆசியா பார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் கருப்பூர், லிங்கம்பட்டி, இளம்புவனம், ஊத்துப்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 57 விவசாய பெண்மணிகளுக்கு கிரீடம் அணிவித்து நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆசியா பார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ஆசியா கேண்டி நிறுவனர் பத்மா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசியா பார்ம்ஸ் நிறுவன பணியாளர் மேக்சி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி பாக்யாது சாலிகா கலந்து கொண்டு 57 விவசாய பெண்மணிகளுக்கு கிரீடம் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பேசினார். இதில் ஆசியா பார்ம்ஸ் நிறுவன பணியாளர்கள் மோகனா,முரளி,சுரேஷ், மாரி செல்வம். உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசியாபார்ம்ஸ் நிறுவன பணியாளர் முருகன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










