» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிணற்றில் ஆண் சடலம் மீட்பு : போலீஸ் விசாரணை!
வெள்ளி 7, மார்ச் 2025 12:22:24 PM (IST)
கயத்தார் அருகே கிணற்றில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிந்தது. இதுகுறித்து தகவல் அறந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் வலது கையில் வீரன் சுந்தரலிங்கனார் உருவமும், இடது கையில் லாவண்யா லாவணி என்று பெயரும் பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது மரணம் தொடர்பாக கயத்தார் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நபர் குறித்து அடையாளம் தெரிந்தவர்கள் கயத்தார் காவல் நிலையத்திற்கு 9498101848 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










