» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 800 கிலோ கடல் அட்டை பறிமுதல் : 2பேர் கைது
வெள்ளி 7, மார்ச் 2025 11:37:52 AM (IST)

தூத்துக்குடியில் 800கிலோ கடல் அட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, மற்றும் எஸ்ஐ முத்துமாரி தேவேந்திரர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புதுக்கோட்டை ஜோதி நகர் பகுதியில் உள்ள குடோனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் இருந்த பிளாஸ்டிக் கேன்களில் கடல் அட்டைகள் இருந்தன.
மொத்தம் 800 கிலோ கடல் அட்டைகளையும், அதனை கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், ஆம்னி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தெரசா புரத்தைச் சேர்ந்த ஹபீப் ரஹ்மான் (38), கயத்தாறைச் சேர்ந்த கண்ணன் என்ற அருணாச்சலம் (47) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் வனத்துறை ஆய்வாளர் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறையினர் இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










