» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பள்ளி நேரங்களில் நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் : கண்டுகொள்ளாத காவல்துறை!
வெள்ளி 7, மார்ச் 2025 10:22:06 AM (IST)
தூத்துக்குடியில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துறைமுக நகரான தூத்துக்குடிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் எப்போதும் முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து தூத்துக்குடி மாநகர் பகுதியில் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரையும், மாலை 4 மணி 9 மணி வரை கனரக வாகனங்களுக்கு காவல் துறை தடை விதித்துள்ளது.
பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதால் காவல்துறை இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன. இதனை போலீசார் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே மாநகர ஏ.எஸ்.பி. தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
SeenivasagamMar 8, 2025 - 05:17:12 AM | Posted IP 172.7*****
காசு வாங்கிட்டு விட்ருவாங்க
ManiMar 7, 2025 - 11:48:17 PM | Posted IP 172.7*****
முக்கியமா தங்ககனி லாரி
RajaMar 7, 2025 - 05:55:54 PM | Posted IP 172.7*****
ஆமா சரிதான் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)











NAAN THAANMar 8, 2025 - 04:11:00 PM | Posted IP 162.1*****