» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த 3 பேர் கைது : 29 பவுன் நகைகள் மீட்பு!
வெள்ளி 7, மார்ச் 2025 9:10:21 AM (IST)
மெஞ்ஞானபுரம் அருகே மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 29 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மனைவி ருக்குமணி (72). இவர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். சந்திரசேகர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். கடந்த பிப்.1-ந் தேதி மதியம் 3 மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் புளி வியாபாரி போல் சென்றுள்ளனர். அங்கு இருந்த ருக்குமணியிடம் புளி இருக்கிறதா? என கேட்டுள்ளனர்.
அவர் பதில் சொல்லி முடிப்பதற்குள் திடீரென்று 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் உள்ளிட்ட 29 பவுன் நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து ருக்குமணி கொடுத்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், இந்த வழப்பறியில் ஈடுபட்ட நெல்லை ராஜவள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சையா மகன் முத்துக்குமார் (46), ஆழ்வார்திருநகரியை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (30) ஆகிய 2 பேரையும் கைது ெசய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான நெல்லை கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துப்பாண்டி (32) என்பவர் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 29 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் முத்து பாண்டியை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










