» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது : 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
வெள்ளி 7, மார்ச் 2025 9:08:02 AM (IST)

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புறவழிச்சாலையில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக டிஎஸ்பி ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்து. இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். தனிப்படை போலீசார் அந்த 2பேரையும் துரத்தி சென்று பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, அந்த 2 பேரிடமும் விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் யுவன் பரத் (20), லிங்கம்பட்டியைச் சேர்ந்த போஸ் மகன் சுரேஷ் (22) என்பதும், இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. பின்னர் 2பேரையும், பறிமுதல் செய்த கஞ்சாவையும் மேற்கு போலீசாரிடம், தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










