» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்: ஓட்டப்பிடாரம் அருகே சோகம்

வெள்ளி 7, மார்ச் 2025 9:05:52 AM (IST)



ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் அவரது மகன் பிளஸ்-2தேர்வு எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித்தொழிலாளியான இவரது மனைவி சிவனம்மாள். இவர்களுக்கு கதிரவன் என்ற மகனும், எழிலரசி என்ற மகளும் உள்ளனர். கதிரவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பும், எழிலரசி 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

கருப்பசாமி சிறுநீரக பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். உடலை பார்த்து மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தற்போது பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்திலும் கதிரவன் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.

தேர்வு முடிந்து மதியம் வீட்டிற்கு வந்த அவரை, அவரது தங்கை எழிலரசி கட்டிப்பிடித்து கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது. உறவினர்கள், 2 பேருக்கும் ஆறுதல் கூறி தேற்றினார்கள். தொடர்ந்து கருப்பசாமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory