» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 7, மார்ச் 2025 8:57:36 AM (IST)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரம் அருகேயுள்ள காமராஜா்நகரைச் சோ்ந்த தனிஸ்லாஸ் மகன் சந்தியாவு(68). இவா், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் காவல் சரகப் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சந்தியாவுவை கைது செய்தனா்.
தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ் விசாரித்த, சத்தியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துலட்சுமி ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










