» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணம் படிப்பிற்கு ஒரு தடை என்ற நிலை இருக்கக் கூடாது : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு

புதன் 26, பிப்ரவரி 2025 3:12:18 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த குழந்தைகளுக்கும் பணம் படிப்பிற்கு ஒரு தடை என்ற நிலை இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (26.02.2025), பள்ளி கல்வித்துறை சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு பேட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் தெரிவித்ததாவது: பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற சிறப்பு நிகழ்ச்சி வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடைபெற்றது. பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9, 10 இரண்டாம் பிரிவாகவும், 11, 12 மூன்றாம் பிரிவாகவும் பிரிக்கப்பட்டு பெண் குழந்தைகள் பங்கு பெற்றனர். பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா அறிவியல் செயல்முறை போட்டிகள் நடைபெற்று, பரிசு பெற்ற குழந்தைகளுக்கு (முதல் மூன்று இடங்களுக்கு) பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

இடைநின்ற மாணவர்களை சிறப்பாக பள்ளியில் சேர்த்த தலைமை ஆசிரியர், ஆசிரியர், மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் உயர்வுக்கு படியில் சிறப்பாக பணியாற்றிய தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரிய பயிற்றுநர், இல்லம்தேடி கல்வி தன் ஆர்வலர்கள், கலை திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள், ஏரல் தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் மாணவர்களை சேர்க்கை செய்த இல்லம்தேடி கல்வி தன்ஆர்வலர்கள், ஆகியோர்களுக்கும் கேடயம் சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பரிசு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். பெண் குழந்தைகள் தங்களது உயர் கல்வியினை உறுதி செய்ய வேண்டும். பட்டப்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றியடைய வேண்டும். நமது மாவட்டத்தில் கல்லூரிக்கனவு, உயர் கல்விக்கு படி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் மூலமாக 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு குறிப்பாக படிப்பதற்கு பணம் இல்லை என்று கூறிய மாணவர்களை அணுகி அவர்களுக்கு உதவி செய்து மேற்படிப்பு படிக்க உதவி செய்துள்ளோம்.

இதேபோன்று நமது மாவட்டத்தில் எந்த குழந்தைகளுக்கும் பணம் படிப்பிற்கு ஒரு தடை என்ற நிலை இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு அளிக்கக்கூடிய உயர் கல்விக்கான தொகை அரசு பள்ளிக்கூடங்களில் படித்த பெண் குழந்தைகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழும், ஆண் குழந்தைகளுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. இத்தொகையை வைத்தே அக்குழந்தைகள் தங்கள் கல்வி செலவுகளை மேற்கொள்ளலாம்.

இருப்பினும் படிப்பதற்கு ஏதாவது குறைபாடுகள் பணத்தின் மூலம் இருந்தால் எங்களை அணுகலாம். உயர்கல்விக்கான உதவியும் செய்கின்றோம். நமது மாவட்டத்தில் நடந்த உயர் கல்வி உயர்வுக்கு படி கல்லூரி கனவு போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக கண்டறியப்பட்ட குழந்தைகளின் மேற்படிப்பிற்காக ரூ.5000, ரூ.4000, ரூ.2000 தொகை என மொத்தம் 60க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. பல கோடி மகளிருக்கு நமது மாவட்ட பெண் குழந்தைகள் முன்மாதிரியான பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும்.

வருகின்ற கல்வி ஆண்டில் நல்ல முறையில் தேர்வு எழுதவும் வேண்டும். தேர்வு முடித்த பின்பு பொது தேர்வு, போட்டி தேர்வு போன்றவைகளில் கலந்து கொண்டு மகளிர்க்கான திறன்களை மேம்படுத்த வேண்டும். வீட்டில் தாய், தந்தையர், பள்ளியில் ஆசிரியர்கள் ஆகியோரை மதித்து உங்களுடைய உள் உணர்வு படி சிறந்த தளங்களை தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும். உங்களுக்கான உள்ளடங்கிய திறன்களை வெளிக்கொணர்ந்து வெற்றி அடையவும் வேண்டும்.

மேலும் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் புதிதாக தொடங்கப்பட்ட ஏரல் தொழில் பயிற்சி மையத்தில் தொழில் பிரிவில் 46 குழந்தைகளை சிறப்புற சேர்த்து குழந்தைகளின் கல்வியில் ஒளி பிறக்க செய்த அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமூகப் பணிக்கு அந்தத் தன்னார்வலர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டதுக்கும் மகிழ்ச்சி. இறுதியாக அனைத்து குழந்தைகளும் கல்வியில் அதிக அக்கறை செலுத்தி படித்து வெற்றி பெறவும் மேற்படிப்பு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு சிறப்படையவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், நான் முதல்வன் உயர்வுக்குப்படி திட்டத்தின் அதிகமான மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்து படிக்க சிறப்பான நடவடிக்கை மேற்கொண்ட தூத்துக்குடி நகர்புற வட்டார வளர்மைய ஆசிரியர் பயிற்றுனர் பி.வனிதா உட்பட  ஆசிரியர், ஆசிரிய பயிற்றுநர், இல்லம்தேடி கல்வி தன் ஆர்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, மாவட்ட சமூக நலஅலுவலர் செல்வி பிரேமலதா, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நேர்முக உதவியாளர், அலுவலகப் பணியாளர், ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory