» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

தூத்துக்குடியில் காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2025-ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்களுக்கான எழுத்து தேர்வு நாளை 21.12.2025 நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, வஉசி கல்லூரி, கிரேஸ் இஞ்சினியரிங் கல்லூரி மற்றும் காமராஜ் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் மொத்தம் 5146 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
மேற்படி எழுத்து தேர்வை முன்னிட்டு காவல்துறையினர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் இன்று (20.12.2025) ஏவிஎம் கமலவேல் மஹாலில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேற்படி தேர்வுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர், காவல் உதவி/ துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்தூக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதன், மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குருவெங்கட்ராஜ், தூத்துக்குடி (பயிற்சி) காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)










