» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)
சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காந்திநகர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுடலைமுத்து (30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பாகு மகன் சுந்தர் (42), நாசரேத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (24). இவர்கள் இருவரும் சாத்தான்குளம் தட்சமொழி முதலூர் சாலையில் செயல்படும் மதுபான கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
அந்த பாரில் நடந்த பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் காலை சுந்தரும், ஜெகதீசும் சேர்ந்து சுடலைமுத்துவை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். அவர்கள் 2 பேர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக சாத்தான்குளத்தை சேர்ந்த அருணாச்சலம், மதுபான கூடத்தின் உரிமையாளர் செல்வகுமார், ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் சுந்தர், ஜெகதீஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அருணாச்சலத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். செல்வகுமாரை தேடி வருகின்றனர். இதற்கிடையே சுடலைமுத்துவின் உடல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று காலையிலும் 2-வது நாளாக உறவினர்கள் சாத்தான்குளம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். அவர்களிடம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கவுதம், சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கலைஞர் கனவு இல்லம் வீடு, குழந்தைகள் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை, மாதம் தோறும் பென்ஷன் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சுடலைமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதற்கிடையே அவரின் மனைவிக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் முதற்கட்ட தொகையான ரூ.6 லட்சத்தை திருச்செந்தூர் உதவி கலெக்டர் கவுதம் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










