» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு மையங்களுக்கு, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை ரயில்வே காவல்துறை தலைவர் ஏஜி பாபு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025ம் ஆண்டிற்கான நேரடி காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (21.12.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி, வ.உ.சி கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி, காமராஜ் கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து மேற்படி தேர்வு மையங்களுக்கு இன்று (21.12.2025) சென்னை ரயில்வே காவல்துறை தலைவர்A.G. பாபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வில் மொத்தம் 5146 விண்ணப்பதாரர்களில் 2756 ஆண் விண்ணப்பதாரர்களும், 828 பெண் விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 3584 விண்ணப்பதாரர்கள் இன்று தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)










