» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)
சாத்தான்குளம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகன் அந்தோணி பீட்டர் (23), இவர் சவுண்டு சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார். சாத்தான்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஆண்ரோஸ்பிரபு மகன் நார்மன் ஜோசுவா, (18), பேய்குளம் வெங்கட்ராயபுரத்தை சேர்ந்த பேச்சி மகன் சுடலை சூர்யா (19), சாத்தான்குளம் கொத்துவா பள்ளி வாசல் பகுதியைச் சேர்ந்த ரிபாய்தீன் மகன் பெரோஸ்கான் (19). இவர்கள் 3 பேரும் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர்.
அந்தோணி பீட்டர் நேற்று மாலையில் வேலை நிமித்தமாக சாத்தான்குளம் சாலையில் டி.கே.சி. நகர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.அச்சம்பாடு ஊருக்கு வளைவில் திரும்பும்போது அவரது பின்னால் நார்மன் ஜோசுவா, சுடலை சூர்யா, பெரோஸ்கான் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்தோணி பீட்டர் பரிதாபமாக இறந்தார். இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளயங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மெஞ்ஞானபுரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)










