» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!

ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேசிய யூடியூபர், திராவிட விடுதலை கழகத்தினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டி நகர பா.ஜனதா தலைவர் எம்.பி.காளிதாசன் தலைமையில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் நீதிப்பாண்டியன், உள்ளிட்டோர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதிகிருஷ்ணனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேட்டூர் அணை சதுரங்காடி என்ற இடத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலக வலியுறுத்தி கடந்த 13-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் யூடியூபர் ஒருவர் கலந்து கொண்டு, இந்திய விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியை கீழ்தரமான முறையில் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவரது சமூக வலைதள பக்கங்களிலும் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதியாரை இழிவுபடுத்தி பேசிய யூடியூபர், திராவிட விடுதலை கழகத்தினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கழுகுமலை மேற்கு ஒன்றிய பார்வையாளர் ஜெகதீஷ் மற்றும் பா.ஜனதாவினர் கழுகுமலை காவல் நிலையத்திற்கு வந்து பாரதியாரை இழிவாக பேசிய யூடியூபரை கைது செய்ய வலியுறுத்தி புகார் மனுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வனிடம் கொடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory