» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி மோதி மீனவர் பலி
புதன் 26, பிப்ரவரி 2025 11:26:43 AM (IST)
தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி பேரூரணி ராஜாராம் நகரைச் சேர்ந்தவர் குமராண்டி மகன் அய்யனார் (45). காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான இவர், கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் வேலை முடிந்து தூத்துக்குடி துறைமுகம் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழிய வேகமாக வந்த டாரஸ் லாரி அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4வது தெருவைச் சேர்ந்த செல்லப்பா மகன் அருண்குமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)










