» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாயமான தனியார் நிறுவன ஊழியர் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை!
புதன் 26, பிப்ரவரி 2025 11:13:45 AM (IST)
கடம்பூர் அருகே மாயமான தனியார் நிறுவன ஊழியர் முட்புதரில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர், பசுவந்தனை ரோடு, ரயில்வே கேட் அருகே முட்புதரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக கடம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் சங்கர் (50) என்பது தெரியவந்தது. இவர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 15ம் தேதி மருத்துவமனையில் இருந்து காணாமல் போய்விட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி சசிகலா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சங்கர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)










