» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையை விரிவுபடுத்தக்கோரி காத்திருக்கும் போராட்டம் : மந்தித்தோப்பு பகுதி மக்கள் அறிவிப்பு
புதன் 26, பிப்ரவரி 2025 10:51:10 AM (IST)
கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டை விரிவுபடுத்தக்கோரி நாளை காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி மாணவர்கள் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறுகலான பகுதியை போர்க்கால அடிப்படையில் விரிவாக்கம் செய்திட வலியுறுத்தி நாளை (பிப்.27) வியாழன் காலை 10 மணி முதல் பிருந்தா சூப்பர் மார்கெட் அருகில் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், அனைத்து பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும், மந்தித்தோப்பு ரோடு அனைத்து பகுதி பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)










