» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
புதன் 26, பிப்ரவரி 2025 7:58:21 AM (IST)
கோவில்பட்டியில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட வாலிபர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரவாஞ்சிநகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவு அந்த பெண்ணின் வீட்டுக்குள் மர்மநபர்கள் 2 பேர் திடீரென மதுபோதையில் அத்துமீறி புகுந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் தனது கணவருடன் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கோவில்பட்டி இ.பி. காலனி செந்தமிழ் நகரை சேர்ந்த மாரியப்பன் (28), அவரது கூட்டாளி வீரவாஞ்சிநகரை சேர்ந்த மாரிச்செல்வம் (27) என்பது தெரியவந்தது.
கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த மாரியப்பனை போலீசார் கைது செய்தனர். மாரிச்செல்வம் புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தார். அங்கு போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்ததும் மாரிச்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, போலீஸ்காரர் பொன்ராம் ஆகியோரை வெட்டிவிட்டு தப்ப முயன்றார்.
உடனே போலீசார் துப்பாக்கியால் மாரிச்செல்வத்தின் இடது காலில் சுட்டு பிடித்து கைது செய்தனர். அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மாரிச்செல்வம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கோவில்பட்டி கதிரேசன்கோவில் மலையடிவார பகுதியில் ஏற்கனவே கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 13 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் தெரிவித்தனர். மேலும் அங்கு விரும்ப தகாத சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார்கள். எனவே, கைதான மாரியப்பன், அவரது கூட்டாளி மாரிச்செல்வம் ஆகியோருக்கு வேறு ஏதேனும் பாலியல் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா? கோவில்பட்டி கதிரேசன்கோவில் மலையடிவார பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அது செயல்படுவதில்லை. இதனால் அந்த பகுதியில் இதுபோன்ற சமூகவிரோத செயல்கள் நடக்கிறது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் புறக்காவல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வு : 3584 பங்கேற்பு - சிறப்பு அதிகாரி ஆய்வு
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:41:55 PM (IST)

தூத்துக்குடியில் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 6:37:10 PM (IST)

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)










