» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டு உரிமையாளருக்கு கொலைமிரட்டல் : ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:57:52 PM (IST)

நாசரேத் அருகே வீடு காலி பண்ண மறுத்து உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரியல் எஸ்டேட் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து நாசரேத்து போலீசில் கூறப்படுவதாவது: சென்னை ஊரம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பால்ராஜ் மகன் சுந்தர்ராஜ் வயது (59), இவரது சொந்த ஊர் மூக்குப்பீறி இவர் சொந்த ஊருக்கு வரும்போது அதே ஊரில் வசித்து வரும் வீடு வாங்கி விற்பனை செய்து வரும்சாமுவேல் மகன் ஜெபஸ்டின் மார்ட்டின் என்பவரிடம் 2021 ம் ஆண்டு வீடு கிரையத்துக்கு வாங்கி உள்ளார். 

சுந்தர்ராஜ் சென்னையில் வசித்து வருவதால் புரோக்கர் ஜெபஸ்டின் மார்ட்டின் என்பவர் இடம் வீடு பராமரிப்பு செய்யும்படி புரோக்கர் ஜெபஸ்டின் மார்ட்டின் யிடம் கூறியுள்ளார். ஆனால் ஜெபஸ்டின் மார்டின் சுந்தர்ராஜ்க்கு தெரியாமல் இசக்கி அமமாள் நீலா என்பவருக்கு வீடு வாடகைக்கு கொடுத்துள்ளார். இதை அறிந்த சுந்தர்ராஜ் குடியிருக்கும் நபரிடம் வீடு காலி பண்ண சொல்லியுள்ளார். 

ஆனால் ஜெபஸ்டின் மார்ட்டின் வீடு காலி பண்ணாத நான் தான் உன்னை வீட்டில் வாடகைக்கு வைத்தேன் என்று கூறி வீடு காலி பண்ண மறுத்து விட்டார். 4மாதத்திற்கு முன் மூக்குபீறி வந்த சுந்தர்ராஜ் இசக்கியம்மாள் நீலாவை வீட்டை காலி பண்ணுங்கள் என்று சொல்லியுள்ளார் மூன்று மாதத்தில் காலி பண்ணுகிறேன் என்று கூறினார்கள் ஆனால் காலி பண்ண வில்லை சம்பவத்தன்று புரோக்கர் ஜெபஸ்டின் மார்ட்டின் என்பவர் வீடு காலி பண்ண முடியாது எனக்கு 50ஆயிரம்தருமாறு சுந்தர்ராஜை மிரட்டி கொலை செய்ய முற்பட்டுள்ளார். 

உடனே சுந்தர்ராஜ் நாசரேத போலீசில் புகார் செய்தார்.முதல் நிலை காவலர் ராமஜெயம் வழக்கு பதிவு செய்தார் நாசரேத் இன்ஸ்பெக்டர். கங்கைநாத பாண்டியன் தலைமையில் நாசரேத் போலீசார் புரோக்கர் மார்ட்டின் ஜெபஸ்டினை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory