» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவன் கோவிலில் வேலாயுதத்தை திருடிய பெண் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:15:41 PM (IST)
ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் பூஜை நேரத்தில் வேலாயுதத்தை திருடிய பெண்ணை பக்தர்கள் கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள பிரசித்தி பெற்ற சோமநாத சுவாமி கோவிலின் உள்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. இவற்றில் பைரவர் சன்னதியில் இருந்த திரிசூலம் கடந்த வாரம் பூஜை நேரத்தில் திடீரென மாயமானது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 1½ அடி உயர இந்த சூலம் பித்தளையால் ஆனது. இதனை யாரோ திருடி சென்றிருக்கலாம் என்று கருதி கோவிலின் நிர்வாகி சுப்பையா ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில் இந்த கோவிலில் நேற்று இரவு வழக்கமான பூஜை வைபவங்கள் நடந்து கொண்டிருந்தன. சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பள்ளியறை பூஜை வழிபாட்டில் இருந்தனர். அப்போது பிரகாரத்தின் சுப்பிரமணிய சுவாமி சன்னதியின் உள்ளே புகுந்த ஒரு பெண் எதையோ அங்கிருந்து எடுத்து பையில் மறைத்துக்கொண்டு நழுவிச் சென்றுள்ளார். இதனைக் கண்ட சில பக்தர்கள் கூச்சலிட அந்தப் பெண் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
உடனே சிலர் விரட்டிச் சென்று அந்தப் பெண்ணை பிடித்துள்ளனர்.அப்போது அவர் வைத்திருந்த பையின் உள்ளே சுப்பிரமணிய சுவாமிக்குரிய 2 அடி உயர செம்பு உலோகத்திலான வேலாயுதம் இருந்துள்ளது. பிடிபட்ட அந்த பெண், தான் குறி சொல்லும் மந்திரவாதி என்றும் கோவிலில் உள்ள வேலாயுதத்தை வைத்து பூஜை செய்தால் நான் சொல்வதெல்லாம் பலிக்கும் என்பதால் இதனை எடுத்தேன் என்று கூறியுள்ளார். இதனால் அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் கோவிலின் பூஜகர் விக்னேஷ் பட்டர் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










