» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.
ஆனால் நான்கரை ஆண்டு காலம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. செவிலிய பணியாளர்களை நிரந்தரம் ஆக்கவில்லை என்றும், காலி பணியிடங்கள் நிரப்பாததை அடுத்து கடந்த மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும் தொகுப்பு புதிய செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளே தொகுப்பூதிய செவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மூன்றாவது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தொகுப்பூதிய செவிலியர்கள் கூறுகையில் 10 வருடங்களாக நாங்கள் தொகுப்பூதிய செவிலியராக பணியாற்றி வருகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் காலிப் பணியிடங்கள் இல்லை என்று கூறுகிறார். காலி பணியிடங்களை நீங்கள் கூறவில்லை. அரசு மருத்துவமனையில் கட்டிடங்கள் தான் உயர்கிறது. எங்களுடைய வாழ்வாதாரம் உயரவில்லை. செவிலியர்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தமிழகத்தில் 18 ஆயிரம் செவிலியர்கள் காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி 356 தொகுப்புதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் இன்று வரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. கொரோனா காலகட்டத்தில் எங்களது பணியை முதலமைச்சர் பாராட்டினார். ஆனால் நாங்கள் தற்போது தெருவில் வந்து போராடுகிறோம். தமிழக முதல்வர் கண்டு கொள்ளவில்லை. தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் எங்களது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.
சுகாதாரத் துறை அமைச்சர் போராட்டம் எங்கும் நடைபெறவில்லை என்று கூறுகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் தொகுப்பு புதிய செவிலியர்கள் பணிக்கு திரும்பி விட்டார்கள் என்று கூறினார். நாங்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை தமிழ்நாடு முழுவதும் 8000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தொகுப்பூதிய செவிலியர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)










