» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 4:14:02 PM (IST)



பத்திரிகையாளர் நல வாரியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

"பத்திரிகையாளர் நல வாரியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி பத்திரிக்கையாளர்கள் நலன் காக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகார அட்டை வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினர் செய்தி சேகரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட டோல்கேட்டில் இலவசமாக அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 40 ஆண்டுகள் கடந்தும் பத்திரிக்கை யாளர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே, எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்திற்கு டியூஜே மாநகர் மாவட்ட தலைவர் சக்தி முருகன் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட தலைவர் இருதய ஞான ரமேஷ் முன்னிலை வகித்தார். மூத்த பத்திரிக்கையாளர் அருண், டி.யூ.ஜே., தேசிய குழு உறுப்பினர்கள் அலெக்ஸ் புரூட்டோ, காயல் அகம்மது சாகிப், திருச்செந்தூர் கிருஷ்ணன், ஐயப்பன், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற செயலாளர் மோகன்ராஜ், பத்திரிக்கை மீடியா கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ், தமிழக பத்திரிக்கையாளர் சங்க தலைவர் அலெக்ஸாண்டர், தமிழன்டா இயக்கத் தலைவர் உலகாள்வோன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

மூத்த பத்திரிக்கையாளர்கள் ஆத்திமுத்து, கண்ணன், தூத்துக்குடி மாநகர மாவட்ட துணைத் தலைவர் சண்முக ஆனந்த், பொருளாளர் ஞானதுரை,  செய்தி தொடர்பாளர் பொன் பலவேச ராஜ், தீக்கதிர் குமார்,  பாலகிருஷ்ணன், ராஜேந்திர பூபதி, ராமசந்திரன், மூத்த பத்திரிக்கையாளர் குமாரவேலு, கோவில்பட்டி மீனாட்சி சுந்தரம், ஸ்ரீவைகுண்டம் ஞானதுரை, புறநகர் மாவட்ட பொருளாளர் சாந்தகுமார், பத்திரிக்கையாளர் மன்ற பொருளாளர் ராஜ்,  உட்பட அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory