» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் யாதுமானவள் தன்னம்பிக்கை விழிப்புணர்வு கருத்தரங்கு

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 3:47:20 PM (IST)



கோவில்பட்டியில் 'யாதுமானவள்' என்ற தன்னம்பிக்கை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

கோவில்பட்டி ரோட்டரி சங்கம், இதயம் குழுமம்,எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி ரோட்ராக்ட் சங்கம், விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் சௌபாக்யா மகாலில் யாதுமானவள் தன்னம்பிக்கை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் இதயம் முத்து தலைமை வகித்தார்.

ரோட்டரி மாவட்ட அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ், முன்னாள் உதவி ஆளுநர் டாக்டர் சம்பத்குமார், ரோட்டரி சங்கத் தலைவர் தாமோதரக் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி ரோட்ராக்ட் சேர்மன் ஜவஹர் அனைவரையும் வரவேற்றார். 

யாதுமானவள் திட்ட சேர்மன் விஜயகுமாரி யாதுமானவள் திட்ட நோக்கவுரையாற்றினார். பிரபல பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினரா கலந்து கொண்டு யாதுமானவள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி மாணவர்களின் கேள்வி பதில்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் மருத்துவர் கமலா மாரியம்மாள்,  எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி செயலாளர் கண்ணன், ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்கள் சீனிவாசன், ஜெயபிரகாஷ் நாராயணசாமி,  ஆசியா பார்ம்ஸ்பாபு, வி.எஸ் பாபு, எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி முதல்வர் செல்வராஜ், சொர்ணா நர்சிங் கல்லூரி முதல்வர் சாந்திப்பிரியா,  உள்பட மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory