» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3பேர் கைது: 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 3:26:26 PM (IST)



தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் கடந்த 2 மாதங்களாக பழைய பஸ் நிலையம், மார்க்கெட் அரசு மருத்துவமனை உள்பட பல இடங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடு போனது. இது சம்பந்தமாக மத்தியபாகம், தென்பாகம், வடபாகம், ஏரல் உள்பட பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது

அதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், நகர ஏஎஸ்பி மதன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை சப் இன்ஸ்பெக்டர சுடலைமுத்து மற்றும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். 

இதில் அவர் தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் கற்குவேல் குமார் என்ற அப்பாச்சி குமார் (31) என்பதும் அவர் தனது நண்பர்கள் முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் 1வது தெருவை சேர்ந்த சுந்தரவேல் மகன் பட்டு ராஜா (25), முத்தையாபுரம் ராஜீவ் நகர், 7வது தெருவை சேர்ந்த சவரி முத்து மகன் செல்வம் (44) ஆகியோர்களுடன் சேர்ந்து தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி ஏரல் உள்பட பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி ஆகியோர் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்கள் திருடிய 11 பைக்குகளை பறிமுதல் செய்தனா். 


மக்கள் கருத்து

naan thaanFeb 26, 2025 - 10:49:44 AM | Posted IP 162.1*****

really nice , but we must need to find the buyers from this criminals

மக்கள்Feb 26, 2025 - 09:16:14 AM | Posted IP 172.7*****

ஏன் அந்த திருடன் மூஞ்சியை காட்டவில்லை ???

எவன்Feb 26, 2025 - 09:15:32 AM | Posted IP 162.1*****

முத்தையாபுரத்து காரங்க எல்லாம் திருட்டு பயலுக

தமிழன்Feb 25, 2025 - 08:09:23 PM | Posted IP 172.7*****

முத்தையாபுரம் பகுதியில்தான் அதிகமான வழிப்பறி மற்றும் பைக் திருடர்கள் உள்ளனர்?.உஷார் மக்களே!

ARUNACHALAMFeb 25, 2025 - 05:02:04 PM | Posted IP 172.7*****

11 Bike 25 Lakhs?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory