» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மினி பஸ் உரிமையாளர்கள் புதிய திட்டத்திற்கு மாற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 12:20:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிற்றுந்து உரிமையாளர்கள், புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு அரசாணை எண். 33 உள்(போக்குவரத்து) நாள் 23.01.2025-ன் படி சிற்றுந்துகளுக்கான புதிய விரிவான திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விரிவான திட்டம் வருகின்ற மே மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. 

இந்த திட்டத்தின் படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் மொத்த நீளம் 25 கீ.மீ. ஆகும். அதில், போக்குவரத்து சேவை செய்யப்படாத தடத்தின் நீளம் மொத்த வழித்தட நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள சிற்றுந்து உரிமையாளர்கள், புதிய திட்டத்திற்கு மாற விரும்பினால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனை தொடந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க 56 புதிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய விரிவான திட்டத்தில் சிற்றுந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் வருகின்ற மே மாதம் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

56 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்து அனுமதிச்சீட்டிற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான கடைசி தேதி வருகின்ற மார்ச் 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory