» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தடையை மீறி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 11:43:20 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தடையை மீறி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். .
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண் விடுப்பு, காலமுறை ஊதியம், பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று தற்காலிக விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குவிந்தனர். இதையடுத்து ரூரல் டிஎஸ்பி சுதிர், சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் அவர்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதனால் போலீசார் - அரசு ஊழியர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேலும் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் மூடப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 159 பெண்கள் உள்பட 361 பேரை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அரசு ஊழியர் சங்கத்தின் போராட்டம் காரணமாக அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










