» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்து மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 11:27:34 AM (IST)



மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்து தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மத்திய அரசு பாஜகவின் மும்மொழி இந்தி திணிப்பை எதிர்த்து திமுக கட்சி மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு (FSO-TN) மற்றும் தமிழ் மாணவர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சார்பில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் திமுக மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண்குமார் முன்னில வகித்தார். 

இதில், வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆகாஷ் பாண்டியன், கனகராஜ், கோகுல்நாத், பிரதீபா, யோகலட்சுமி, மாநகர அமைப்பாளர் டைகர் வினோத், துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், கார்த்திகேயன், கந்தசாமி, சத்தியா, ஈஸ்வரி, மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், தமிழ் மாணவர் மன்றம் அமைப்பாளர் சீனிவாசன், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார், மதிமுக மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் உட்பட பல்வேறு மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

அதுகள்Feb 27, 2025 - 06:16:14 PM | Posted IP 162.1*****

படிக்காத மாணவர் அமைப்பினர்

ivargal manavargala?Feb 26, 2025 - 01:34:55 PM | Posted IP 162.1*****

Ennathu ivargal manavargala??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory