» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூடுகை!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 11:22:23 AM (IST)



நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் - ஆசிரியர் கூடுகை நடைபெற்றது.

கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமை வகித்து தலைமையுரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைத் தலைவர் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் செல்வராஜ் ஐசக்ஆரம்ப ஜெபம் செய்து துவக்கினார். கல்லூரியின் செயல்பாடுகள் மாணவ மாணவிகள் ஒழுக்கம் கட்டுப்பாடுகளை பொருளியல் துறைத் தலைவரும் கல்லூரி நிதியாளர் பேராசிரியர் சுரேஷ் ஆபிரகாம் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறினார். 

நூலகப் பயன்பாட்டின் அவசியத்தைப் பற்றி கல்லூரி நூலகர் முனைவர் ஜாய் சோபினி விளக்கினார். உடற்கல்வி இயக்குநர் முனைவர் ராஜாசிங் ரோக்லண்ட் விளையாட்டின் சிறப்பையும் அரசு வேலை வாய்ப்பில் அளிக்கப்படும் முன்னுரிமையினையும் பற்றி பேசினார். இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் கிரேஸ்லின் ஜூலியானா நிறைவு ஜெபம் செய்தார்.

இதில் 700 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வரலாற்றுத்துறைத் தலைவர் தாமஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் வழக்கறிஞர் ரவிந்திரன் சார்லஸ் ஆலோசனையின்படி கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory