» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் செல்போன் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 10:47:01 AM (IST)
தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் கிராமம் பிரான்சிஸ் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (51), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மியூசிக் பேண்ட் செட் குரூப்பில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள தனியார் திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளார், பின்னர் அவர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 4ம் கேட் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த ஒரு வாலிபர் அவரை லிஃப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி அவரது செல்போன், 400 ரூபாய் பணம் மற்றும் மற்றும் அவரது மனைவிக்கு போன் செய்து ஜிபேமூலம் அந்த வாலிபரின் செல்போன் எண்ணிற்கு ரூபாய் 5000 ஆகியவை வாங்கி சென்றுள்ளார். இது சம்பந்தமாக சிப்காட் காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி அண்ணா நகர் 8வது தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் சிவா வயது (27) என்பவர் என்பவர் செல்போன் மற்றும் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள், செல்போன் மற்றும் அவரது பைக்கை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










