» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நகரத்தில் நவீன ரோந்து வாகனம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவு
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 10:32:44 AM (IST)

தூத்துக்குடி நகரத்தின் முக்கிய இடங்களில் காவல் ரோந்து வாகனத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ரோந்து பணி மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் சீரிய முயற்சினால் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் காவல் ரோந்து வாகனத்தில் 360டிகிரி சுழலுக்கூடியதும், 100மீட்டர் தூரம் தெளிவான காட்சிகளை பதிவு செய்யும் வசதியும், முக அடையாளம் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவரா என கண்டறியும் FRS (Facial Recognition System) என்னும் நவீன வசதிகளுன் கூடிய PTZ ( Pan Tilt and Zoom Camera) என்னும் சிசிடிவி கேமரா மற்றும் வாகன எண்களை தானியங்கி முறையில் தெளிவாக பதிவு செய்யும் ANPR (Automatic Number Plate Recognition Camera) ஆகிய சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டது.
மேற்படி நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ரோந்து வாகனத்தின் செயல்பாடுகளை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்தார்.
மேலும் தூத்துக்குடி நகர உட்கோட்டம் முழுவதும் நீதிமன்ற பாதுகாப்பு பணி, பள்ளிகள், பெண்கள் விடுதி, மருத்துவமனை பகுதிகள் உட்பட தூத்துக்குடி நகரத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)











AlaguFeb 25, 2025 - 09:09:46 PM | Posted IP 162.1*****