» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:57:00 AM (IST)
குரும்பூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு கிராமத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 6 மாதமாக தற்காலிக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராமன் (42). இந்த நிலையில் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ராமன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுபற்றி மாணவி, தனது தாயாரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவிக்கு ஆசிரியர் ராமன் மீது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ராமனை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)











makkalFeb 25, 2025 - 11:32:25 AM | Posted IP 162.1*****