» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி காவலர் பல்பொருள் அங்காடியில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:48:12 AM (IST)
தூத்துக்குடியில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடியில் தற்காலிக பணிக்கு காவல் துறையினரின் வாரிசுதாரர்கள், காவல் ஆளிநர்களின் கணவர் அல்லது மனைவி விண்ணப்பிக்கலாம்.
10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 20 - 40 வயதுக்குள்பட்டவராகவும், குற்றப் பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும். ஆயுதப்படைக் காவலர் பல்பொருள் அங்காடியில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து காவலர் பல்பொருள் அங்காடியில் பிப். 27க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94421 69589 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










