» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாலியல் குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ் : தூத்துக்குடி அருகே பரபரப்பு!
திங்கள் 24, பிப்ரவரி 2025 10:41:22 PM (IST)
தூத்துக்குடி அருகே துப்பாக்கியால் சுட்டு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் பகுதியில் கை குழந்தையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்த இளம் பெண்ணின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி புகுந்து போதையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக பாதிக்கப்பட்ட பெண் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு தடயவியல் மற்றும் கைரேகை பிரிவு அதிகாரிகள் வருகை தந்து தடயங்களை கைப்பற்றினர்.
மேலும் மோப்பநாய் சுனோ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக வீரவாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம், மாரியப்பன் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில் வீரவாஞ்சி நகர் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை பிடிக்கச் சென்றபோது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்ததில் மாரியப்பன் கீழே விழுந்து கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மாரியப்பனை சுற்றி வளைத்த போலீசார் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
சம்பவத்தில் தொடர்புடைய கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த வேல்முருகன் மகன் மாரி செல்வம் வயது 22 என்பவரை தேடிவந்தனர் இந்த நிலையில் அவரை பிடிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு தலைமையில் போலீசார் தேடி வந்தனர். இதற்கு இடையில் அவர் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை தேரிக்காட்டில் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்
அப்போது அவர் அரிவாளைக் காட்டி போலீசாரை மிரட்டியதால் உடனடியாக போலீசார் அவரது காலில் ஒரு ரவுண்டு துப்பாக்கிகள் சூட்டனர். இதில் அவர் கீழே விழுந்ததும் அவரை மடக்கி பிடித்து கைது செய்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி ஏ.எஸ்.பி மதன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










