» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்சியரைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 24, பிப்ரவரி 2025 7:34:51 PM (IST)

விருதுநகர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி மாதம் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து குமாரலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைக் கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்கள், மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் தற்காலிக பணியிடை நீக்கம் உத்தரவை திரும்ப பெறக்கோரியும் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சுப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வட்டாரத் தலைவர் கருப்பசாமி பாண்டியன், வட்டச் செயலாளர் இசக்கிமுத்து, வட்ட பொருளாளர் கோபிநாத் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










