» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
திங்கள் 24, பிப்ரவரி 2025 3:42:03 PM (IST)

தூத்துக்குடியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து கழகம் நகர பணிமனையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னதாக அண்ணா தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து, ஜெ. உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் தூத்துக்குடி மண்டல நிர்வாகி ராமசாமி, கிளை நிர்வாகிகள் ஆதிராஜ், வெள்ளையா, முத்துகிருஷ்ணன், முருகவேல், சண்முகராஜ், தொப்பை, கணபதி, முருகேசன், இ.பேச்சிமுத்து, ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், அண்ணா தொழிற்சங்க சார்பாக அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










