» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் துவக்க விழா: அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு!

திங்கள் 24, பிப்ரவரி 2025 3:19:02 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் இன்று கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 "முதல்வர் மருந்தகங்களை” காணொலி வாயிலாக திறந்து வைத்து, விழாப் பேருரையாற்றியதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்வர் மருந்தகத்தினை  மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தலைமையில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார். 

தமிழ்நாடு முதலமைச்சர்  15.08.2024 சுதந்திர தின விழா உரையில் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்கள்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm/ D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் முதல்வர் மருத்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்வர் மருந்தகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 11 முதல்வர் மருந்தகங்களும். தனியார் தொழில் முனைவோர் மூலம் 09 மருந்தகங்களும் என ஆக மொந்தம் 20 மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக ரூ.3.00 இலட்சம் வழங்கப்படுகிறது. இதில் ரொக்கமாக ரூ.1.50 இலட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர் சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1.50 இலட்சம் மதிப்பிற்கு மருந்துகள் வழங்கப்படுகிறது.

முதல்வர் மருந்தகம் அமைக்கும் கூட்டுறவு சங்கத்திற்கு அரசு மானியமாக ரூ.2.00 இலட்சம் வழங்கப்படுகிறது. இதில் ரொக்கமாக ரூ.1.00 இலட்சம் முதல்வர் மருந்தகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர் சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவுவதற்கு வழங்கப்படுகிறது. மேலும் ரூ.1.00 இலட்சம் மதிப்பிற்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் 11 கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.11.00 இலட்சமும், 9 தொழில்முனைவோர்களுக்கு ரூ.13.50 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.24.50 இலட்சம் அரசு மாணியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) மூலம் ஜௌரில் மருந்துகள் கொள்முதல் செய்தும். இதர மருந்துகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு (TNCCF) மூலம் கொள்முதல் செய்தும் இம்முதல்வர் மருந்தகங்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் ஜனரிக் மருந்துகள் (Generic Medicines), பிராண்டட் மருந்துகள் (Branded Medicines), சர்ஜிக்கல்ஸ் (Surgicals), சித்தா, ஆயுர்வேதம், நியூட்ரா சூட்டிகல்ஸ் (Nutraceuticals) மற்றும் யூனானி மருந்துகள் ஆகிய மருந்துகளை மிக மிக குறைந்த விலையில் தரமானதாக பெற்று பயன் பெற முடியும். 

இந்நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா,  மேயர் பெ.ஜெகன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர்  ராஜேஷ், சரக துணைப்பதிவாளர்கள்  மு.கலையரசி (தூத்துக்குடி), இ.ரா.இராமகிருஷ்ணன் (கோவில்பட்டி), செல்வி இ.ரா.சக்தி பெமிலா (திருச்செந்தூர்) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory