» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வியாபாரிகளின் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா: ஏ.எம்.விக்கிரமராஜா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திங்கள் 24, பிப்ரவரி 2025 3:10:16 PM (IST)



புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 15வது ஆண்டு விழா, புதிய சங்கங்களில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா புதுக்கோட்டை ஆர்.சி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலாளரும், புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவருமான பீட்டர் தலைமை வகித்தார். 

துணைத் தலைவர்கள் சர்க்கரை, பி.என்.பெரியசாமி, செயலாளர்கள் கே.பெரியசாமி, முருகன் ஆகியோர் வரவேற்றனர். பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷணன், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் வைகுண்டராஜா, வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். 

முன்னதாக, ஏ.எம்.விக்கிரமராஜாவிற்கு புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதிதாக இணைந்த கூட்டாம்புளி மற்றும் மறவன்மடம் சங்கங்களில் மற்றும் புதுக்கோட்டையில் இரண்டு இடங்களில் பேரமைப்பின் கொடியை ஏ.எம்.விக்கிரமராஜா ஏற்றி வைத்தார். 

தொடர்ந்து புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறையை திறந்து வைத்தார். தொடர்ந்து வியாபாரிகள் சார்பில் புதுகோட்டையில் அமைக்கப்பட்டுள்ள 7 சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்தார். முன்னதாக புதுக்கோட்டை பஜார் பகுதியில் காவலர்கள் அமர்வதற்காக புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடையை தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதிர் திறந்து வைத்தார்.

விழாவில், திருநெல்வேலி அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் இசக்கிமுத்தையாவின் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சக்தி வணிகர்கள் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. சடகோபன் நம்பி குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. நிறைவாக விழாவில் கலந்து கொண்ட வியாபாரிகள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் வெற்றி ராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், தெற்கு மாவட்ட பொருளாளர் அருணாசலம், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜம், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பட்டு, கோவில்பட்டி செயலாளர் ரவி மாணிக்கம், திருச்செந்தூர் தலைவர் பாரதி சுரேஷ், எட்டையபுரம் துணைத்தலைவர் ராஜா, செய்தி தொடர்பாளர் அம்புரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory