» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : தமிழக அரசுக்கு கோரிக்கை!
திங்கள் 24, பிப்ரவரி 2025 12:24:06 PM (IST)

புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்.18ம் தேதி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மறைமாவட்டம் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், "வருகிற மார்ச் 5ஆம் தேதி கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பமாகிறது. இயேசு இறந்த புனித வெள்ளி (ஏப்.18ம் தேதி) தினத்தை தியாகம் மற்றும் அமைதியின் நாளாக கிறிஸ்தவ மக்கள் கடைபிடித்து வருகின்றனோம்.
ஆகவே, ஏப்.18ம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். "காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு. சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் உழைப்பாளர் தினம்”, போன்ற சிறப்பு நாள்களோடு புனித வெள்ளி நாளையும் சேர்த்து சட்ட மன்றத்தில் கொள்கை மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










