» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கீழஈராலில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 24, பிப்ரவரி 2025 11:52:24 AM (IST)



கீழஈராலில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், கீழஈரால் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் (பறையர்) சமூதாய மக்கள் சார்பாக மேம்பாலம் கேட்டு 2008-ம் ஆண்டு முதல் இன்று வரை பல ஆண்டுகளாக மேம்பாலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் அவர்களுக்கும் மற்றும் அது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் மேம்பாலம் வேண்டி விண்ணப்பித்துள்ளோம். அது தொடர்பாக துறை அதிகாரிகள் எங்கள் மனுவை ஏற்றுக் கொண்டு பாலம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளனர். 

ஆனாலும் 2021-ம் ஆண்டு வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் 18.03.2021-ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருவர் உயிரிழந்தனர். அன்று நடந்த மக்களின் ஆர்ப்பாட்டத்தில் அது சம்பந்தமான சமாதானக் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் வந்து இரண்டு மாதங்களில் உங்கள் மேம்பால கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்திரவாதம் அளித்தனர். 

மேலும் மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பணி முன்னேற்ற ஆய்வு நடத்தப்படும் என்று உத்திரவாதமும் தந்தனர். மேலும் மேம்பாலம் தொடர்பான ஆய்வும் செய்யப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது கீழஈராலில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. 

மேலும் எங்கள் ஊரில் அனைத்து சமுதாய மக்களும் சேர்ந்து சுமார் 4,000 குடும்பம் வசித்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கில் சுமார் 1,500 குடும்பங்கள் இருக்கிறது. மேற்கிள் சுமார் 2,500 குடும்பங்கள் இருக்கிறது. ஆனாலும் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு எங்கள் ஊரிற்கு வரவேண்டிய மேம்பாலம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான மஞ்சநாயக்கன்பட்டி என்ற தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விலக்கிற்கு மேம்பாலம் அமைக்கப் போவதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த ஊரிற்கும், தேசிய நெஞ்சாலைக்கும் மேற்குபுறத்தில் 3 கி.மீ உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் கீழஈரால் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சுமார் 2,000 தலித் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் ஊரில் வரவேண்டிய மேம்பாலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தேசிய நெடுஞ்சாலைக்கு கிழக்கில் (East) அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. மேலும் அனைத்து சமுதாய மக்களின் விளை நிலங்களும் உள்ளது. 
மேற்குப்புறத்தில் அங்கன்வாடி மையம், துவக்கப்பள்ளி. நடுநிலைப்பள்ளி, கல்லூரி, நியாயவிலைக்கடை, அஞ்சல் நிலையம், கிராம வங்கி, ஆங்கில பள்ளி, மளிகைக் கடைகள், பஞ்சாயத்து அலுவலகம், வழிபடும் ஆலயங்கள், இடுகாடு, குளம் இவை அனைத்து தேவைகளும் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்று பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர். 

இத்தனை ஆண்டுகளாக வெறும் கண்துடைப்பு வேலைகள் மட்டுமே நடந்துள்ளது என்பது தெரியவருகிறது. எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது. 2008 முதல் இன்று வரை சுமார் 100க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. இதில் சுமார் 45 பேர் உயிர்சேதம் அடைந்துள்ளனர். மேற்பட்டோர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இதைக் கருத்தில் கொண்டு தயவு கூர்ந்து விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory