» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அளவுக்கு அதிகமாக மது குடித்த ஐஸ் கம்பெனி ஊழியர் சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!
திங்கள் 24, பிப்ரவரி 2025 11:36:44 AM (IST)
தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த ஐஸ் கம்பெனி ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி வி.இ., ரோடு, அந்தோணியார் கோவில் அருகே டாஸ்மார்க் மதுபான கடை உள்ளது. இந்த கடை அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடப்பதாக தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் ஏரலைச் சேர்ந்த மாரி கிருஷ்ணன் (40) என்பதும், தூத்துக்குடி தெற்கு ராஜா தெருவில் உள்ள ஒரு ஐஸ் கம்பெனியில் கடந்த ஒரு வார காலமாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக அவர் மது குடித்துள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்து இறந்து இருக்கலாம் என்று போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










