» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

திங்கள் 24, பிப்ரவரி 2025 11:22:31 AM (IST)



தூத்துக்குடியில் ஜெயலலிதா 77வது பிறந்தநாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்  வழங்கினாா்.
    
தூத்துக்குடி எஸ்எஸ்மாணிக்கபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு தெற்கு மாவட்ட வா்த்தக அணிசெயலாளர் துரைசிங் தலைமை வகித்தாா். விழாவில் மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் கலந்து காெண்டு ஆயிரம் பேருக்கு அாிசி வேஷ்டி சேலை, அலுமினிய டவேரா, 3 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளிகள் ஆகியவற்றை வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில் தற்போது தமிழகத்தில் தேவையற்ற செயல்களும் சம்பவங்களும் அதிகாித்து கொண்டே செல்கின்றன. இதனை காவல் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் எஸ்பி, ஏஎஸ்பி இருவரும் நல்லவர்கள் தான் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் சில விஷயங்களுக்கு துணைசெல்கின்றனா். அதனால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. 

ஓவ்வொரு தாய் தந்தையரும் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துகொள்ள வேண்டும் திசை மாறிவிட்டால் வாழக்கை சீரழிந்துவிடும். பொறுமை அடக்கம் விட்டுக்கொடுத்தல் போன்றவைகள் இல்லாத நிலை இருப்பதை கண்டு மன வேதனையடைகிறேன். எதிர் வரும் 2026ல் தோ்தல் நமக்கு முக்கியம் அனைவரும் ஓற்றுமையாக பணியாற்றி எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக்க உழைக்க வேண்டும். என்று பேசினாா். 

விழாவில் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், வரவேற்புரையாற்றினாா்.    பகுதி செயலாளர் பொன்ராஜ் முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமாா், முன்னாள் துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின்பாண்டியன், முன்னாள் மீனவரணி செயலாளர் அகஸ்டின், வட்டச்செயலாளா்கள் ஜெனோபா், சந்திரசேகா், வட்டப்பிரதிநிதி ராஜ், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், மீனவரணி தலைவர் டெலஸ்பா், முன்னாள்கவுன்சிலா் சகாயராஜ், முன்னாள் மீனவரணி இணைச்செயலாளர் ஜோசப், மாவட்ட பிரதிநிதி ஜேடியம்மாள், சிறுபான்மை அணி செயலாளர் அசன், போக்குவரத்து பிாிவு டெரன்ஸ், முன்னாள் வட்டச்செயலாளர் ஸ்டாலின் உட்பட பலர் பலர் கலந்து காெண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory