» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேமுதிக கொடி 25-ம் ஆண்டு வெள்ளி விழா பொதுக்கூட்டம்
திங்கள் 24, பிப்ரவரி 2025 11:14:25 AM (IST)

கீழ ஈராலில் தேமுதிக கொடி நாள் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு அன்னதானத்துடன் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்-ன் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் இன்று எட்டையபுரம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில், கொடி நாள் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழகத்தின் கொள்கைகள் மற்றும் கொடி விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தேமுதிக தேர்தல் பணிக்குழு செயலாளர் தாமோதரக்கண்ணன் கலந்து கொண்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது, கட்சியினரிடம் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக இணையும் கூட்டணியை தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்தோடு பொதுமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்கிற்கு பணம் வாங்காமல் வாக்கு செலுத்த வேண்டும் என்றும், தேசிய கல்விக்கொள்கையைப் பற்றி பேசி திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்தார்.
பொதுக்கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவர் கொம்பையா பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜன், ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், சத்தியமூர்த்தி, பெருமாள்சாமி, தங்கச்சாமி, மணிகண்டன், ஜெயக்குமார், ஆறுமுகப் பெருமாள், மாரியப்பன், செல்வம், ரவிக்குமார், கோட்டைசாமி, நடராஜன், செல்லப்பாண்டி, அருண், பெருமாள் மற்றும் கேப்டன் மன்றம், மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவரணி, தொண்டரணி, சமூக வலைதள அணி, பொறியாளர் அணி, தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், இக்கூட்டத்தின் நிறைவில் கேப்டன் விஜயகாந்தின் பாணியை பின்பற்றிய கட்சியினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










