» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் : 2 பேர் கைது
திங்கள் 24, பிப்ரவரி 2025 8:46:45 AM (IST)
கொல்லம் அருகே தண்டவாளத்தில் தொலைபேசி கம்பத்தை வைத்து தூத்துக்குடி ரயிலை கவிழ்க்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே குண்டராவில் உள்ள தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் ஒரு தொலைபேசி கம்பம் கிடந்தது. இதை அந்த பகுதி வழியாக சென்ற ஒருவர் பார்த்து ஏழுகோண் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த தொலைபேசி கம்பத்தை அகற்றி விட்டு சென்றனர்.
பிறகு சிறிது நேரம் கழித்து ரயில்வே போலீசார் மீண்டும் அதே இடத்துக்கு வந்த போது மேலும் ஒரு தொலைபேசி கம்பம் தண்டவாளத்தில் கிடந்தது. இதனையும் ரயில்வே போலீசார் அங்கிருந்து அகற்றினர். அடுத்தடுத்து தொலைபேசி கம்பம் தண்டவாளத்தில் போடப்பட்ட சம்பவம் ரயிலை கவிழ்க்க நடந்த சதியாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொலைபேசி கம்பம் கண்டெடுக்கப்பட்ட சமயத்தில் அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து நெல்லை வழியாக பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் கடந்து செல்ல இருந்தது. மேலும் இதுகுறித்து ஏழுகோண் போலீசாரும், கொல்லம் ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் போலீசார் செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தண்டவாளத்தில் தொலைபேசி கம்பங்கள் வைக்கப்பட்டதாக கருதப்படும் நேரத்தில் அந்த பகுதியில் 2 செல்போன் எண்கள் இயங்கியது தெரிய வந்தது. அந்த செல்போன் எண்கள் யாருடையது என விசாரணை நடத்திய போது, அந்த எண்கள் பெரும்புழையை சேர்ந்த அருண் (29), குண்டராவை சேர்ந்த ராஜேஷ் (33) ஆகியோருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தொலைபேசி கம்பத்தை திருடியதாகவும், அதை விற்பனை செய்ய வசதியாக, துண்டு துண்டாக உடைப்பதற்காக தண்டவாளத்தில் போட்டதாகவும் கூறினர். இதனை ஏற்றுக் கொள்ளாத ரயில்வே போலீசார் இருவர் மீதும் ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தொடர்ந்து இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










