» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாய் குறுக்கே வந்ததால் விபத்து: முதியவர் சாவு
திங்கள் 24, பிப்ரவரி 2025 8:41:48 AM (IST)
கோவில்பட்டி அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்த முதியவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்து சண்முக சிகாமணி நகர் 5-வது தெருவை சேர்ந்த மகாலிங்க மகன் சுந்தரம் (84). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மந்திதோப்பு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். மந்தித்தோப்பு சாலை அண்ணாமலை நகர் அருகே சென்றபோது, நாய் ஒன்று குறுக்கே ஓடியுள்ளது.
இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தனர் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










