» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்குகள், செல்போன்கள் திருட்டு : 7 பேர் கைது
திங்கள் 24, பிப்ரவரி 2025 8:33:16 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பைக்குகள், செல்போன்கள் திருடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனியைச் சேர்ந்த வசந்தகுமார் (53) என்பவர், கடந்த ஜன. 25ஆம் தேதி அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார். பைக்கில் வந்த இருவர் அவரை வழிமறித்து, 2 செல்போன்களைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம். புகாரின்பேரில், மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, அம்பேத்கர் நகர் அருள்ராஜ் (20), முத்துராஜ் (20) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மரிய அந்தோணி (40) என்பவர், கடந்த 19ஆம் தேதி வீட்டு முன் பைக்கை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின்பேரில், தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி முல்லை நகர் ஆகாஷ் (20), டி.சவேரியார்புரம் மாதவன் (19) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வேந்தன் (34) என்பவர், கடந்த 4ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உறவினரைப் பார்ப்பதற்காக பைக்கை நிறுத்திச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின்பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து, காதர் மீரா நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), முத்துமணி (23) ஆகியோரைக் கைது செய்து, பைக்கை மீட்டனர்.
கோவில்பட்டியில்...
கோவில்பட்டி 1ஆவது செக்கடி தெரு முருகேசன் மகன் செல்வக்குமார் என்பவர், அருணாசலம் பேட்டைத் தெருவில் கைப்பேசி விற்பனைக் கடை நடத்திவருகிறார். இவர், கடந்த 4ஆம் தேதி இரவு வீட்டு முன் பைக்கை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் பார்த்தபோது அதைக் காணவில்லை.
புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி சௌந்தர் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்த திருமால் மகன் சாரதி என்ற அர்ஜ§னன் (25) என்பவரை நேற்று கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










