» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி ஆற்றில் குளித்த வாலிபர் திடீர் மாயம் : தேடும் பணி தீவிரம்!
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 7:24:15 PM (IST)
ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மாயமான வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் முகேஷ் கண்ணன் (20). இவர் தனது நண்பர்கள் 3 பேருடன் இன்று மதியம் 2 மணி அளவில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். சேர்மன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற அவர் மாயமாகி விட்டார்.
அப்போது உடன் குளித்துகொண்டிருந்த நண்பர்கள் அவரை தேடியும் கண்டுபிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து ஏரல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து முகேஷ் செல்வனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும உறவினர்கள் சம்பவ இடத்தில் வந்தனர். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










