» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்: திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

ஞாயிறு 23, பிப்ரவரி 2025 7:12:36 PM (IST)



தூத்துக்குடியில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பாஜகவினர் குறுக்கிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய பா.ஜ.க அரசின் ஹிந்தி திணிப்பை கண்டித்து தூத்துக்குடியில் திராவிடர் கழகம் சார்பில் பொறுப்பாளர் பால் ராசேந்திர தலைமை தலைமையில் சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் அருகில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பாஜக ஆதரவாளர்கள் 2 பேர் மோடிஜி வாழ்க என்று கோசமிட்டபடியே ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்தனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் திடீரென நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போதுமான போலீசார் பாதுகாப்பு இல்லாததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த 2 பேர் அங்கிருந்து சென்று விட்டனர். 

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழா்  விடியல் கட்சி  சந்தனராஜ், திமுக அன்பழகன்  மற்றும் மனித நேயக் கட்சியைச் சேர்ந்தவர்கள்  உள்பட 30 பேர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory